முதலமைச்சர் ஸ்டாலின் வருகை அலோகலப்படும் திருவாரூர்

முதலமைச்சர் வருகையை ஒட்டி திருவாரூரில் பாதுகாப்பு பணிகள் போக்குவரத்தில் மாற்றம்
திருவாரூர் பகுதிக்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வரை இருக்கிறார்.. இன்று சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு திருச்சி வந்து, திருச்சியில் இருந்து திருவாரூருக்கு கார் மூலம் வருகிறார். தொடர்ந்து இன்று மாலை திருவாரூர் அருகே உள்ள பவித்திரமாணிக்கம் பகுதியில் இருந்து துர்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரயில்வே ரவுண்டானா வரை "ரோடு ஷோ"மூலம் சாலையில் நடந்து செல்ல இருக்கிறார். அதனை முன்னிட்டு இரண்டு மூன்று நாட்களாக முதலமைச்சர் நடந்து செல்லும் சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள பகுதி வீடுகள் மற்றும் கடைகளின் முன் பகுதியை நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி துறையினர் காவல்துறையினரின் உதவியுடன் இடித்தனர். தொடர்ந்து சாலைகளின் இரு பகுதியிலும் இரும்பு தடுப்பு அமைத்து ள்ளனர்.இதனால் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ள சாலையாகவும், முக்கிய போக்குவரத்து சாலையாகவும் உள்ள துர்காலயா ரோட்டில் இன்று காலை அதிக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோ, வேன், மற்றும் இருசக்கர வாகனங்கள் போக்குவரத்து பாதிப்பில் சிக்கின. இதனால் பள்ளி மாணவர்கள் வாகனத்தில் இருந்து இறங்கி பள்ளிக்கு நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.. மேலும் அவசர வேலைக்கு செல்லுபவர்களும் அலுவலகத்திற்கு செல்லக் கூடியவர்களும்.. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதனால் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
Next Story