காரமடை: பால் வியாபாரி கொலை: போலீசார் தீவிர விசாரணை !

கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள ஆயர்பாடி கிராமத்தைச் சேர்ந்த பால் வியாபாரி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள ஆயர்பாடி கிராமத்தைச் சேர்ந்த பால் வியாபாரி சஞ்சய் (23) நேற்று முன்தினம் இரவு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். விவசாயிகளிடம் இருந்து பசுமாடு பாலை வாங்கி வியாபாரம் செய்து வந்த அவர், தங்கையின் பிரசவத்தையொட்டி வீடு குறைவாக இருந்ததால் அருகே உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். மறுநாள் காலை அவர் வெளியே வராததை கவனித்த தந்தை, அறைக்குள் சென்று பார்த்தபோது, சஞ்சய் கழுத்து மற்றும் முகத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார். தகவலறிந்த காரமடை போலீசார் மற்றும் கோவை தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாயுடன் விசாரணை நடத்தி உள்ளனர். சஞ்சயின் உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story