அ.தி.மு.க கூட்டத்தில் பிக்பாக்கெட்: ஆறு பேர் கைது!

அ.தி.மு.க கூட்டத்தில் பிக்பாக்கெட்: ஆறு பேர் கைது!
X
கோவை மேட்டுப்பாளையத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற கூட்டத்தில், பங்கேற்ற பிரமுகர்களிடம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்ட வழக்கில் ஆறு பேர் கைது.
கோவை மேட்டுப்பாளையத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற கூட்டத்தில், பங்கேற்ற பிரமுகர்களிடம் பிக்பாக்கெட் சம்பவம் நடந்தது. ரூ.50 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை பலரிடம் பணம் திருடப்பட்டதாக நேற்று புகார் செய்யப்பட்டது. தங்கராஜ், ஆனந்தன், செல்வராஜ், சரவணகுமார், சுரேஷ், வீரபத்திரன் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்கள். புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறை, கோவை காந்திபுரம் பகுதியில் ஆறுபேரை கைது செய்தது. அவர்கள் திருவேற்காடு, திருப்பதி புத்தூர், தர்மபுரி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும், பிக்பாக்கெட்டில் ஈடுபட்டதும் உறுதி செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story