கோவை: மர்ம மரணம் – பவபூரணி வழக்கில் விரைவான விசாரணை கோரி மனு!

X
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பவபூரணி, கோவை PSG மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியாக படித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரணம் குறித்து உடனடியாக தகவல் தரப்படாமல், காலதாமதமாக பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டதாகவும், மரணத்திற்கான காரணம் தெளிவாக தெரிவிக்கப்படவில்லையெனவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்த சூழலில், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனி உள்ளிட்ட அமைப்புகள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கி, உண்மை வெளிவர விரைவான விசாரணை நடத்த வேண்டும் என்றும், பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் நேற்று வலியுறுத்தின. மாணவர் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்தோர் இதில் கலந்துகொண்டனர்.
Next Story

