காமராஜர் பிறந்த நாள் விழா: மாநில பேச்சுப் போட்டியில் மாணவர்கள் அசத்தல்!
பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்த நாளையொட்டி, கோவை சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் கல்வித் திருவிழா 2025 மாநில அளவிலான பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதில் அரசு, தனியார் பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்று காமராஜரின் சாதனைகள், கல்வி பங்களிப்பு குறித்து உரையாற்றினர். வெற்றியாளர்களுக்கு சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை பரிசுகள் வழங்கினார். ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியம் என அவர் வலியுறுத்தினார். மாணவர்கள், காமராஜரைப் பற்றி பேச வாய்ப்பு கிடைத்ததில் பெருமை உணர்ந்ததாக தெரிவித்தனர்.
Next Story




