திருப்பத்தூரில் அஞ்சல் ஊழியர்கள் சங்க சார்பாக ஒரு நாள் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்றது

திருப்பத்தூரில் அஞ்சல் ஊழியர்கள் சங்க சார்பாக ஒரு நாள் வேலை நிறுத்தம்  போராட்டம் நடைபெற்றது
X
திருப்பத்தூரில் அஞ்சல் ஊழியர்கள் சங்க சார்பாக ஒரு நாள் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம திருப்பத்தூரில் அஞ்சல் ஊழியர்கள் சங்க சார்பாக ஒரு நாள் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்றது அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் குரூப் சி தபால்காரர் மற்றும் நான்காம் பிரிவு ஊழியர்கள் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது* திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தலைமை அஞ்சலகம் அருகே அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் மற்றும் நான்காம் பிரிவு ஊழியர்கள் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பாக பொறுப்பு தலைவர் யுவராஜ் குடியாத்தம் கிளை தலைவர் ரவி ஏ ஐ ஜி டி எஸ் யு திருப்பத்தூர் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் மற்றும் கண்டன கோஷ ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுமார் 30க்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு எட்டாவது சம்பள குழுவை உடனே அமைக்க வேண்டும் ஜி டி எஸ் ஊழியர்களையும் எட்டாவது சம்பள குழு வரையறைக்குள் கொண்டு வர வேண்டும் ஐ டி சி திட்டத்தை கைவிட வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்திட வேண்டும் புதிய தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசின் ஊழியர் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Next Story