ஆம்பூர் ரயில் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசே கண்டித்து ரயில் மறியல் போராட்டம்.

X
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசே கண்டித்து ரயில் மறியல் போராட்டம். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையம் முன்பு தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்ட முனையங்களை கைவிட கோரி மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் புதிய நான்கு தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற்றிடு , குறைந்தபட்ச ஊதியம் மாதம் 26 ஆயிரம் ரூபாய் ஆக நிர்ணயம் செய்துவிடவும், குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ஒன்பதாயிரம் நிர்ணயித்திடவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் உணவு மருந்து விவசாய பொருட்கள் ஜிஎஸ்டி வரி விளக்கு கொடுத்திடவும் என 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பி ஆம்பூர் ரயில் நிலையம் முன்பு ரயில் மாறிய போராட்டம் செய்யும் முற்பட்ட பொழுது காவல்துறையினர் 50க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர். மேலும் இதில் ஏ.ஐ. டி .யு .சி , ஐ .என். டி. யு சி, எல். பி .எஃப் என அனைத்து தொழிலாளர்கள் சங்கம் மாவட்ட , நகர நிர்வாகிகள் , பெண்கள் என பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்...
Next Story

