ஜாக்டோ ஜியோ சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்

X
இந்தியா முழுவதும் இன்று அகில இந்திய வேலை நிறுத்தம் நடைபெறுகிறது இந்த வேலை நிறுத்தத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மாநில அரசு ஊழியர்கள் போக்குவரத்து துறை ஊழியர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் என பல்வேறு தொழிற்சங்கங்கள் கலந்து கொண்ட வேலைநிறுத்தம் ஆனது இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் ஜாக்டோ ஜியோ சங்கத்தின் சார்பாக ஆர்பாட்டமானது நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை தேசம் முழுவதும் அமல்படுத்திட வேண்டும் ஓய்வூதியம் ஒழுங்காற்று முறை ஆணையத்தை PFRDA ரத்து செய்திட வேண்டும் தேசத்தின் எதிர்கால கல்வியை சீரழிக்கும் தேசத்தை கூறு போடும் தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ இந்திய அரசு திரும்ப வேண்டும் தேச நலம் சார்ந்த கல்விக் கொள்கையை வலுக்க வேண்டும் எட்டாவது ஊதிய குழுவை உடனடியாக அமல்படுத்திட வேண்டும் அதற்கான நிதியை அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கீடு செய்தவர்கள் சம வேலைக்கு சம ஊதியம் உறுதி செய்ய வேண்டும் 8 மணி நேர வேலை நேரம் உள்ளிட்ட போராடி பெற்ற தொழிலாளர் உரிமைகளையும் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

