கள்ளக்காதல் தொடர்பாக தம்பியை வெட்டிய அண்ணன்

X
திண்டுக்கல் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த பாண்டி என்பவரது மகன்கள் பவித்ரன்(30), ஹரிஹரன்(26) இந்நிலையில் கள்ளக்காதல் தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக அண்ணன் பவித்ரன் தம்பி ஹரிஹரனை அரிவாளால் தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இதில் ஹரிஹரன் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஹரிஹரனை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பவித்திரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story

