ஸ்ரீவில்லிபுத்தூரில் கத்தியால் குத்து வாங்கிய அரசு மருத்துவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கழக நிர்வாகிகள்...*

ஸ்ரீவில்லிபுத்தூரில் கத்தியால் குத்து வாங்கிய அரசு மருத்துவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கழக நிர்வாகிகள்...*
X
ஸ்ரீவில்லிபுத்தூரில் கத்தியால் குத்து வாங்கிய அரசு மருத்துவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கழக நிர்வாகிகள்...*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கத்தியால் குத்து வாங்கிய அரசு மருத்துவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கழக நிர்வாகிகள்... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ரமேஷ்பாபுவை கடந்த 7 ஆம் தேதி ராஜபாளையம் ஆவரம்பட்டி பகுதியை சேர்ந்த பாண்டிகணேஷ் என்பவர் கத்தியால் குத்தி தாக்கினார். குற்றவாளியை காவல்துறையினர் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மருத்துவர் ரமேஷ்பாபு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ்,நகர செயலாளர் காமராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் குறிஞ்சிமுருகன் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினர் மேலும் அதிமுக சட்டமன்ற உறுப்பினரிடம் குற்றவாளியை குண்டாஸ் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்ய வேண்டும் என மருத்துவர் கோரிக்கை விடுத்தார் உடனடியாக மாவட்ட ஆட்சியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு குற்றவாளியை குண்டாஸ் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய அதிமுக எம்எல்ஏ வலியுறுத்தினார். இந்த நிகழ்வில் ஏராளமான அதிமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story