அஞ்சல் நாயகி உடனுறை அருள்மிகு மாயூரநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. பேறுகால வலியால் தவித்த சிவ பக்தரின் மனைவிக்கு, சிவனே நேரில் இறங்கி வந்து பெண்ணுருவில் பிரசவம் பார்த்ததாக த

X
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அமைந்துள்ள மாயூரநாதர் சுவாமி திருக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட அஞ்சல் நாயகி உடனுறை அருள்மிகு மாயூரநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. பேறுகால வலியால் தவித்த சிவ பக்தரின் மனைவிக்கு, சிவனே நேரில் இறங்கி வந்து பெண்ணுருவில் பிரசவம் பார்த்ததாக தல வரலாறு உடைய சிறப்பு மிக்க தலம். இக் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 30 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 8 நாட்களும் பூச்சப்பரம், சிம்ம வாகனம், கற்பக வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன், சுவாமி வீதி உலா நடைபெற்றது. கடந்த புதன்கிழமை சிறப்பு அபிஷேகத்துடன் கூடிய சுவாமி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனி பெருந் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகரை சுற்றி உள்ள சத்திரப்பட்டி, சேத்தூர், தளவாய்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை 10.30 மணி அளவில் கோயில் வளாகத்தில் உள்ள நிலையில் இருந்து புறப்பட்ட சுவாமி மற்றும் அம்மன் தேர்களை எம்எல்ஏ தங்கப்பாண்டியன், நகராட்சி சேர்மன் பவித்ரா ஷியாம் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் தேரோட்டத்தில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும் வடம் பிடித்து இழுத்தனர். நந்தி கொடியுடன் சங்கு மற்றும் சிவ வாத்தியங்கள் முழங்கியவாறு, ஹர ஹரா கோஷத்துடன் வடம் பிடித்து இழுக்கப் பட்ட தேர்கள் கோயிலை சுற்றி உள்ள 4 ரத வீதிகளிலும் அசைந்தாடியபடி கடந்து பத்திரமாக நிலைக்கு திரும்பியது. தேர் புறப்படும் வரை வெயில் சுட்டெரித்த நிலையிலும், மனம் தளராமல் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந் நிகழ்ச்சியில் 150 க்கும் மேற்பட்ட காவல் துறையினர், ஊர்காவல் படையினர், தீ அணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
Next Story

