ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் மருத்துவர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் மருத்துவர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத
X
ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் மருத்துவர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மருத்துவர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் மருத்துவர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மருத்துவர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை மருத்துவராக பணிபுரிந்து வருபவர் ரமேஷ்பாபு இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள சின்ன கடை பஜார் பகுதியில் சொந்தமாக கிளினிக் நடத்தி வருகிறார் இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் பணி முடிந்து நேற்று இரவு திரும்பிய பொழுது திடீரென வந்த ராஜபாளையம் ஆவரம்பட்டி பகுதியை சேர்ந்த பாண்டியகணேஷ் என்பவர் மருத்துவர் ரமேஷ்பாபுவை இழுத்து போட்டு கத்தியால் சரமாரியாக குத்தினார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மருத்துவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கத்தியால் குத்திய பாண்டிய கணேஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் விசாரணையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் தற்காலிக காவலாளியாக பணிபுரிந்தவர் என்பதும் மருத்துவருக்கும் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவரை கத்தியால் குத்திய பாண்டியகணேஷ் என்பவர் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கடுமையான தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும், மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்புகளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம்,தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், இந்திய பல் மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை வாயில் முன்பு மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். பேட்டி : சுகுமார் ( மாவட்ட அரசு டாக்டர்கள் சங்க தலைவர் )
Next Story