ஒன்றிய அரசை கண்டித்து மின்வாரிய தொழிற்சங்கம் சார்பில் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்

X
மதுராந்தகத்தில் ஒன்றிய அரசை கண்டித்து மின்வாரிய தொழிற்சங்கம் சார்பில் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் மின்வாரிய தொழிற்சங்கம் சார்பில் அரசு பொதுத்துறையினை தனியாருக்கு தாரைவாக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தியும், பழைய பென்ஷன் திட்டத்தை திரும்ப அமல்படுத்த வலியுறுத்தியும், விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து நாடு தழுவிய பொது வேலை நிறுத்தமானது மின்வாரிய தொழிற்சங்கங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய ஊழியர்கள் இல்லாததால் மின் கட்டணம் செலுத்த வரும் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்த முடியாமல் செல்லக்கூடிய ஒரு சூழலானது ஏற்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
Next Story

