பசுமை முறையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிக்கை!

பசுமை முறையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிக்கை!
X
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் துவங்க நிபுணர் குழு பரிந்துரை: ஆட்சியரிடம் தொழில் அமைப்புகள் கோரிக்கை!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை பசுமை முறையில் மீண்டும் துவக்குவதற்கு மாநில அரசிடம் பரிந்துரைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு தொழில் அமைப்பினர், மக்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கூட்டமைப்பினர் அளித்த மனுவில், "தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் தொழிலாளர்கள், தொழிலாளர்களின் குடும்பத்தினர், போக்குவரத்து தொழிலாளர்கள், விற்பனையாளர்கள், பொதுமக்கள் (சுற்றியுள்ள கிராமங்கள், மீனவர் பகுதிகள் மற்றும் நகரப் பகுதிகள்) மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கீழ்காணும் மனுவை உங்கள் கருணையுடன் பரிசீலிக்க வேண்டுகிறோம். ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை பசுமை முறையில் மீண்டும் துவங்கும் நிபுணர் குழுவின் பரிந்துரை பற்றிய செய்தியை நாங்கள் செய்தித்தாளில் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம் இந்த நிபுணர் குழுவில் இடம்பெற்றவர். சுற்றுச்சூழலுக்காக பர்யாவரண பூஷண் விருது பெற்ற பேராசிரியர் பத்மபூஷண் டாக்டர் கணபதி D. யாதவ் மற்றும் ஒய்வுபெற்ற சுற்றுச்சூழல் பேராசிரியர் டாக்டர் R. நாகேந்திரன் அவர்களின் அறிக்கையை நாங்கள் மனமுவந்து வரவேற்கின்றோம். இந்த அறிக்கையில் வழங்கப்பட்ட பரிந்துரைகள் தொழில்துறை மீட்சி மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக மேம்பாட்டுடன் கூடிய வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றன. தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு இப்போது விஞ்ஞான அடிப்படையிலான தீர்வு கிடைத்துள்ள நிலையில், மாநில அரசு சமநிலையான முடிவை எடுக்க வேண்டுமென நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். தொழிற்சாலை மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள வாழ்வாதார, பொருளாதார இழப்பு நாட்டிற்கும் மாநிலத்திற்குமான காப்பர் தேவை ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாக ஏற்படுத்தாத புதிய தொழில்நுட்பம். கடல்நீரை 80% மேல் பயன்படுத்தல், 100% மறுசுழற்சி நீர் மேலாண்மை. சுத்திகரிக்கப்பட்ட நீரை அருகிலுள்ள கிராமங்களுக்கு பகிர்ந்து கொள்ளுதல். 30% மேலாக காப்பர் மறுசுழற்சி மூலமாக உற்பத்தி செய்தல் இயற்கை வளங்களை பாதுகாத்தல், ஊராட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அடங்கிய உள்ளூர் நிர்வாகக் குழு அமைத்தல். மீண்டும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்குதல் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை உருவாக்குதல், வாடகை வாகனங்கள் மற்றும் உள்ளூர் விற்பனையாளர்களுக்கு ஆதரவு அளித்தல், மருத்துவம் கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட சமூக மேம்பாட்டுக்காக ரூபாய் 100 கோடிபொதுமக்கள் நலனையும் தொழில்துறை வளர்ச்சியையும் ஒருங்கிணைக்கும் இதுபோன்ற பளவாக காப்பர் உற்பத்தி தொடக்கம் சிறந்த மாதிரியாக அமைய வாய்ப்பு உள்ளது. நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்ப்பது அவசியம் தான் ஆனால் முக்கிய உள்நாட்டு தொழில்களை மீண்டும் இயக்குவது அவசியம். காப்பர் என்பது நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான மூலப்பொருள்.இந்தியாவில் குஜராத் ஓடிசா போன்ற மாநிலங்களில் காப்பர் உற்பத்தி தொடர்ந்து தடைபெறுகின்ற நிலையில் நாட்டின் வளர்ச்சிக்காக தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட இந்த நவீள உற்பத்தி முறை பின்பற்றும் ஆலையை மீண்டும் தொடங்க அரசு அனுமதிக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். கடந்த சில ஆண்டுகளாக வேலை இழப்பு, பொருளாதார வளர்ச்சியின் தேக்க நிலை மற்றும் திறமை வாய்ந்த இளைஞர்கள் இடம்பெயர்ந்து செல்வது போன்ற பல இழப்புகளை சந்தித்துள்ள நம் மாவட்டத்திற்கு இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சிறந்த நடவடிக்கையாக அமையும் என்று நம்புகிறோம். இந்த பசுமை மீள்தொடக்கம் திட்டம் தேசஅளவில் தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக அமைய நாங்கள் உறுதியுடன் துணைநின்று செயல்படத் தயாராக உள்ளோம். எனவே தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, மாநில அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story