அஞ்செட்டி அருகே டூவீலரில் சென்ற தாய்-மகன் காயம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியை சேர்ந்தவர் வசந்த் (29) இவர் தனது தாய் மல்லிகாவுடன் டூவீலர் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு அருகே சென்றார் அப்பொது பலத்த காற்று வீசியதால் சாலை ஓரம் இருந்த புங்கன் மர கிளை முறிந்து டூவீலர் மீது விழுந்தது.இருவரும் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தேன்கனிக்கோட்டை தீயணைப்புத்துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். தற்போது பலத்த காற்று வீசி வருவதால் வாகன ஓட்டிகள் சாலைகளில் கவனமுடன் செல்ல வேண்டும் என தீயணைப்புத்துறையினர் அறிவுறுத்தினர்.
Next Story

