சாலை பாதுகாப்பு மன்றம் துவக்கம்

சாலை பாதுகாப்பு  மன்றம் துவக்கம்
X
எஸ் பி தொடங்கினார்
கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை மற்றும் நாகர்கோவில் போக்குவரத்து காவல் சார்பாக பள்ளிகளில் சாலை பாதுகாப்பு மன்றத்தை நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிலையில் மாணவ மாணவிகள் போக்ஸோ, ரோடு செப்டி ,டாஸ்மார்க், ஹெல்மெட் விழிப்புணர்வு போன்ற மாணவ மாணவிகளால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் மாணவர்களுக்கு விளக்கங்கள் அளித்து அவர்களை உற்சாகபடுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி லலித்குமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின், போக்குவரத்து நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் கரோலின் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story