புரட்சி பாரதம் கட்சி ஆர்ப்பாட்டம்

புரட்சி பாரதம் கட்சி ஆர்ப்பாட்டம்
X
நாகர்கோவில்
தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் ஜாதி சான்றிதழ் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,மேலும் தமிழகத்தில் கஞ்சா போதை புழக்கத்தினால் பள்ளி,கல்லூரி மாணவர்கள்,இளைஞர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. இதனை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்தும், மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதியை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, புரட்சி பாரதம் கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எம்எல்ஏவும் கட்சித் தலைவருமான. பூவைஜெகன்மூர்த்தி பங்கேற்றார்.
Next Story