திருநங்கைகள் சிறப்பு முகாம்

திருநங்கைகள் சிறப்பு முகாம்
X
திருநங்கைகள் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் மூலம் திருநங்கைகளின் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றினை வழங்கிட ஏதுவாக சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இன்றைய தினம் நடைபெற்ற முகாமில் 37 திருநங்கைகளுக்கு தேசிய அடையாள அட்டைகள், 15 திருநங்கைகளுக்கு ஆதார் திருத்தம், 3 திருநங்கைகளுக்கு E-SHRM அட்டை பதிவுகள், 1 திருநங்கைக்கு ஆயூஸ்மான் அட்டைகள் பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், ”திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக க.ர.கோகிலகிருஷ்ணன் என்ற திருநம்பிக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகாரம் மையத்தில் தகவல் தொழில்நுட்ப பணியாளர் பணி நியமன ஆணையினை” மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் வழங்கினார் . மேலும், இம்முகாமில் வேலை வாய்ப்பு வேண்டி திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் விண்ணப்பம் வழங்கினார்கள். முதியோர் உதவித்தொகை பெற மனுக்களும் பெறப்பட்டது. இம்முகாமில் மாவட்ட சமூக நல அலுவலர் விஜயராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story