நாமக்கல்லில் இரயில் மறியல் போராட்டம். இரயில் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார்!

X
NAMAKKAL KING 24X7 B |9 July 2025 6:17 PM ISTமோடி அரசின் தொழிலாளர் விரோத, தேச விரோத கொள்கைகளை எதிர்த்து மத்திய தொழிற்சங்கள் நடத்தும் அகில இந்திய வேலை நிறுத்தத்திற்க ஆதரவாக SFI,DYFI,AIDWA,AIKS,AIAWU நாமக்கல்லில் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் பாசனத்திற்கு பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கும் வரி விதிப்பதை மோடி அரசே கைவிட வேண்டும்,விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும், பெட்ரோல், டீசல் வரிகளை குறைத்திடு,தொழிலாளர் நல சட்டங்களை திருத்தாதே,கல்வி, மருத்துவம் சுகாதாரத்தை தனியார்மயமாக்காதே,விவசாய விளை பொருளுக்கு நியாயமான விலையை தீர்மானித்திடு! விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்காதே,பொதுத்துறைகளை தனியார் மயமாக்காதே, அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்! புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கு,MGNREGA -100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு முழுமையாக வேலை கொடு ! முழுமையாக சம்பளம் கொடு ! திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்து! வேலை நாளை 200 ஆகவும், சட்டக்கூலி 600 ஆகவும் உயர்த்திடுக!தேசிய கல்விக் கொள்கை 2020 திரும்ப பெற வேண்டும்.பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்து, சாதி ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றிடுக!உணவு பொருட்கள் மீதான GST வரிகளை முழுமையாக ரத்து செய்,கார்ப்பரேட் முதலாளிகளின் கடன்களை, வரிகளை கறாராக வசூல் செய்!இந்திய அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள மதசார்ப்பற்ற, ஜனநாயக, சோசலிச, விழுமியங்களை பாதுகாத்திட வலியுறுத்தி மோடி அரசின் தொழிலாளர் விரோத, தேச விரோத கொள்கைகளை எதிர்த்து மத்திய தொழிற்சங்கள் நடத்தும் அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக நாமக்கல் இரயில் மறியல் போராட்டம் என்பது நடைபெற்றது. இப்போராட்டத்தில் இந்திய ஜனநாயக சங்கத்தின் மாவட்ட பொருளாளர் SK.சிவச்சந்திரன் தலைமை தாங்கினார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றியத் தலைவர் மு.து.செல்வராஜ் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் எருமப்பட்டி ஒன்றிய தலைவர் V.பிரபு மாதர் சங்கத்தின் தலைவர் S.மாலா விவசாய தொழிலாளர் சங்கதலைவர் N.சிவசங்கர்
Next Story
