ஏழு புதிய பேருந்து வழித்தடங்கள் சேவை துவக்கம்

தருமபுரி பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 7 புதிய பேருந்துகளை கலெக்டர் துவக்கி வைத்தார்
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு நகர பேருந்துகளை நீட்டிப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் இன்று தருமபுரி பேருந்து நிலையத்தில் 7 புதிய மகளிர் விடியில் பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் சதீஷ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி ஆகியோர் வழி நீட்டிப்பு செய்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.அப்போது தருமபுரி முதல் சின்னம்பள்ளி செல்லும் பேருந்தினைக் கூடுதலாக இரவில் ஒரு நடை சின்னம்பள்ளி செல்லுமாறு இயக்குதல். தருமபுரி முதல் பாப்பாரப்பட்டி செல்லும் பேருந்தினைப் பிக்கம்பட்டி வழியாக இயக்குதல். பென்னாகரம் முதல் தின்னூர் செல்லும் பேருந்தினை எம் கே எஸ் நகர் மாரியம்மன் கோயில் வரை நீட்டித்து இயக்குதல். பென்னாகரம் முதல் ஏரியூர் செல்லும் பேருந்தினைக் கொட்டதண்டுகாடு. அஜ்ஜனஅள்ளி வழியாக இயக்குதல் தற்பொழுது இயக்கப்பட்டு வரும் மகளிர் விடியல் பேருந்துகளுக்குப் பதிலாக 7 புதிய பேருந்துகள் பொம்மிடி கடத்தூர் வழியாக தருமபுரி இயக்குதல், பொம்மிடி இருந்து தொப்பூர் வரை செல்லும் பேருந்துணை கொப்பக்கரை, முத்தம்பட்டி வழியாக இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு பேருந்துகளை வழி நீட்டிப்பு செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜிகே மணி வெங்கடேஸ்வரன் நகரமன்ற தலைவர் லட்சுமி மாது உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
Next Story