திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு
X
மதுரை திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
மதுரை திருப்பரங்குன்றம், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 14-07-2025 அன்று அதிகாலை திருக்குடநன்னீராட்டு பெருவிழா நடைபெற உள்ளது. திருக்குடநன்னீராட்டு பெருவிழாவிற்கு 10-07-2025 அன்று மாலை முதல் இத்திருக்கோயிலின் வள்ளி தேவசேனா திருமண மண்டபத்திற்கு முன்பாக யாகசாலை பூஜைகள் துவங்கப்பட உள்ளதால். இத்திருக்கோயிலின் அருள்மிகு சண்முகர் சன்னதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மூலஸ்தானத்திலிருந்து சுவாமிகள் கலை இறக்கப்பட்டு கும்பத்தில் ஆவாகணம் செய்யப்பட்டு யாகசாலைக்கு எடுத்துச்சென்று வைத்து 10-07-2025 மாலை 4.00 மணி முதல் 13-07-2025 இரவு 9.00 மணி முடிய காலை மற்றும் மாலை நேரங்களில் வழிபாடுகள் நடைபெற உள்ளதால் தற்காலிக மூலஸ்தானத்திற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செல்ல இயலாது என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. எனவே, 10-07-2025 மாலை 4.00 மணி முதல் 13-07-2025 இரவு 9.00 மணி முடிய காலை மற்றும் மாலை நேரங்களில் யாகசாலையில் பூஜைகள் நடைபெற உள்ளதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இத்திருக்கோயிலின் நுழைவு பாதையான ஆஸ்தான மண்டபம், திருவாட்சி மண்டபம், வல்லப கணபதி சன்னதி வழியாக சென்று யாகசாலையில் நடைபெறும் பூஜைகளை காணவும், தரிசனம் செய்யவும், அனுமதிக்கப்பட்டு திருமண மண்டபம் வழியாக வெளியே செல்ல பாதைகள் அமைக்கப்பட்துள்ளதாக என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story