திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

X
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழகம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் திருப்போரூர் ரவுண்டானா அருகில் திமுக அரசை கண்டித்தும் மக்கள் நலன் கருதி திருப்போரூர் தொகுதி வாழ் மக்களின் அத்தியாவசிய, அடிப்படை தேவைகளை நிறைவேற்றாததை கண்டித்து முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமையில், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல்,செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

