அங்கன்வாடி குழந்தைகளுடன் கலெக்டர் கலந்துரையாடல்

X
கன்னியாகுமரி அருகே பஞ்சலிங்கபுரம் அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா இன்று (09.07.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் முறை, சமையலறை, பொருட்கள் வைக்கும் இடம், குழந்தைகள் விளையாடுவதற்கான இடம், குழந்தைகளுக்கான கழிப்பறை, குடிநீர் வசதி, உள்ளிட்டவைகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவத்தினை அளித்து பயன்பெற அறிவுறுத்தப்பட்டது.
Next Story

