திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்: அமைச்சர் மதிவேந்தன்,எம்.பி.,ராஜேஷ்குமார் பங்கேற்பு..

X
Rasipuram King 24x7 |9 July 2025 8:15 PM ISTதிமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்: அமைச்சர் மதிவேந்தன்,எம்.பி.,ராஜேஷ்குமார் பங்கேற்பு..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆர்.பட்டணம் பேரூராட்சி, ராசிபுரம் நகராட்சி பகுதியில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் நகர திமுக சார்பில் கடைவீதி பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் நகர திமுக செயலாளர் என்.ஆர்.சங்கர் தலைமை வகித்தார். நகர்மன்றத்தலைவர் ஆர்.கவிதா சங்கர் முன்னிலை வகித்தார். இதில் தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் டாக்டர் எம்.மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்டத் திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நான்காண்டு கால சாதனை திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். இக்கூடத்தில் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., பேசுகையில், தற்போது தமிழக அளவில் பெண்களின் ஆதரவு பெற்ற தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார். அந்த அளவிற்கு பெண்கள் முன்னேற்றத்தை மனதில் வைத்து திட்டங்கள் செயல்படுத்தியதே அதற்கு காரணம். பெண்கள், முதியோர், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என பார்த்து பார்த்து திட்டங்கள் செயல்படுத்தியுள்ளார். இதே போல் ராசிபுரம் தொகுதியில் குடிநீர் கூட்டு குடிநீர் திட்டம், சாலை வசதி, மாவட்ட மருத்துவமனை போன்ற பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தியுள்ளார். ராசிபுரம் நகரின் பொதுமக்கள் வசதிக்காக புறவழிச்சாலை பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் கொண்டுவரப்படும். இதனால் தொலை தூரம் செல்லும் பயணிகள் பயன்பெறுவர். பொதுமக்கள் அரசின் திட்டஙக்ளை கருத்தில் கொண்டு அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் அமைச்சர் மா.மதிவேந்தன் பேசுகையில், ராசிபுரம் நகரில் ரூ.3 கோடி மதிப்பில் புதிய விளையாட்டு ஸ்டேடியம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். ராசிபுரம் தொகுதியில் குடிநீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு ரூ.854 கோடி மதிப்பில் புதிய கூட்டு குடிநீர், ரூ.54 கோடி மதிப்பில் புதிய அரசு மாவட்ட மருத்துவமனை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டு அவர்களின் வாழ்க்கை தரம் உயர முதலமைச்சர் தலைமையிலான அரசு திட்டங்கள் கொண்டு வந்துள்ளது. இதனால் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் அரசுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால் மீண்டும் திமுக அரசு ஆட்சி அமைக்கும் என்றார். கூட்டத்தில் ராசிபுரம் நகர இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா (எ)யோகராஜன், மற்றும் வார்டு செயலாளர்கள், மாவட்ட, நகர, நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றனர்.
Next Story
