ஆரோவில் ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெற்றது

X
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகரத்தில்,ஆரோவில் அறக்கட்டளையின் 69-வது ஆட்சி மன்ற கூட்டம் 2025 ஆரோவில் அறக்கட்டளை பவனில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சி மன்றத் தலைவரும்,தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார்.இந்தக் கூட்டத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன்,ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் டாக்டர் நிரிமா ஓசா, பேராசிரியர் ஆர்.எஸ்.சர்ராஜு,மது பாலா சோனி,குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலாளரும், ஆரோவில் அறக்கட்டளை செயலாளருமான டாக்டர் ஜெயந்தி எஸ் ரவி, ஆரோவில் அறக்கட்டளையின் சிறப்பு அலுவலர் டாக்டர் ஜி. சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் ஆரோவில் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Next Story

