தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம்

X
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம், கோரிக்கை மனுக்களோடு கும்பல் கும்பலாக மாவட்ட ஆட்சித் தலைவரை நேரடியாக பார்க்கப் போகிறோம் என்ற மனமகிழ்ச்சியுடன் காத்திருந்த தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பள்ளி சுகாதார பணியாளர்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் சிறப்பு முயற்சியாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் பணிபுரியக்கூடிய துப்புரவு பணியாளர்களுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. சிறப்பு குறைதீர்ப்பு கூட்டத்தில் 1,213 மனுக்கள் பெறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சுந்தரமகாலிங்கம், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) செந்தில்வேல் உதவி திட்ட அலுவலர் உட்கட்டமைப்பு, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த்துறை, தாட்கோ, மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

