தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலி.

X
கிருஷ்ணகிரி மவட்டம் குத்துக்கோட்யைச் சோ்ந்த விவசாயி யாமன்னாவின் மாடு வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு நேற்று முன்தினம் சென்றது பின்னர். மாலை வீடு திரும்பவில்லை. இதை அடுத்து மாட்டைத் தேடி அவா் வனப்பகுதிக்குள் சென்றார். அவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினா் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில் வனத் துறையினா் தேடியதில் ஒற்றை யானை தாக்கியதில் யாமன்னா உயிரிழந்தது தெரியவந்தது. யாமன்னாவின் உடலை மீட்டு உடற்று ஆய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனா். சம்பவம் இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

