மருதங்கிணறு கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம்

மருதங்கிணறு கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம்
X
மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம்
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா மருதங்கிணறு பகுதியில் மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மக்கள் பயன்பெறும் வகையில் உள்ள திட்டங்களை எடுத்து பேசினர். அதில் குறிப்பாக தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகள் பயன் பெறும் திட்டங்கள் குறித்தும், தாட்கோ துறை மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயன் பெறும் வகையில் கடன் தொகையில் மானியம் வழங்கப்படும் எனவும், சுகாதாரத்துறை மூலம் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் வீட்டிற்கு நேரடியாகவே சென்று நோயாளிகளுக்கு ரத்த அழுத்தம் கண்டறிதல் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல் கண்ணொளி காப்போம் சுற்றும் மூலம் மாணவ மாணவிகளுக்கு கண்சிகிச்சை மற்றும் பாதம் பாதுகாப்போம் திட்டம் மூலம் சர்க்கரை நோயால் பாதங்களில் ஏற்படும் காயங்களை சரிபார்த்தல் உள்ளிட்ட சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் 11,70,000 சித்த மதிப்பீட்டில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தாய் சேய் நல பெட்டகம் கொடுத்தவை வாங்கப்பட்டனர் பயனாளிகளுக்கு பட்டா, முதியோர் உதவித்தொகை, வரன்முறை பட்டா உழவர் அட்டை, இயற்கை உரம் விதைகள் உள்ளிட்டவர்கள் வழங்கப்பட்டன இதனை எடுத்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஊர் பொதுமக்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். அளித்த மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சியன் முடிவில் திருவேங்கடம் வட்டாட்சியர் செல்வகுமார் நன்றி தெரிவித்தார்...
Next Story