நாய் குறுக்கே வந்ததில் விபத்து. வாலிபர் பலி.

X
மதுரை அருகே திருமங்கலம் அருகே முகம்மதுஷாபுரத்தை சேர்ந்த வைரவனின் மகன் சரவணன்(30) என்பவர் நேற்று (ஜூலை.9) புளியங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென நாய் ஒன்று குறுக்கே பாய்ந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டவரை அங்கிருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற அனுப்பினார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story

