டூவீலரில் மண் குவியலில் மோதி விழுந்த வாலிபர் பலி.

X
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் (29)திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் இவர் நேற்று (ஜூலை.9) இரவு சோழவந்தான் சென்று விட்டு தனது சொந்த ஊரான தச்சம்பத்திற்கு திரும்பும் வழியில் ஆர் எம் எஸ் காலனி அருகில் தனியார் மஹால் முன்பு கட்டட வேலைகளுக்காக சாலையின் நடுவே மணலை கொட்டி வைத்துள்ளதாக தெரிகிறது. சாலையில் இருந்த மணல் தெரியாமல் வாகனத்தில் சென்றவர் மணல் குவியல் மீது மோதி தவறி விழுந்ததில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.அருகில் இருந்தவர்கள் அய்யனார் உடலை மீட்டு சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் இறந்து கிடந்த அய்யனாரின் உடலை பார்த்து அழுதது பரிதாபமாக இருந்தது.
Next Story

