மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை

மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை
X
திண்டுக்கல்லில் மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது வழக்கு பதிவு
திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 19 வயது மனவளர்ச்சி குன்றிய பெண்ணிற்கு கக்கன் நகரை சேர்ந்த உதயகுமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண்ணின் பெற்றோர்கள் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துமணி, சார்பு ஆய்வாளர் வனிதா மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட உதயகுமார் மீது வழக்கு பதிவு செய்து உதயகுமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story