மாவட்ட ஆட்சியர் தனியாக சென்று ஆய்வு

X
ஈரோடு மாவட்ட ஆட்சியராக ச.கந்தசாமி கடந்த மாதம் 27 -ஆம் தேதி பொறுப்பேற்றார். தொடர்ந்து, மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.இந்நிலையில், ஆட்சியர் ச.கந்தசாமி அவரது முகாம் அலுவலகத் தில் இருந்து எந்தவித பாதுகாப்பும் இன்றி மாநகர சாலைகளில் மக்களில் ஒருவரைபோல புதன்கிழமை காலை நடைப்பயிற்சி சென்றார். அப்போது, நகரின் தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகளை ஆய்வு மேற் கொண்டார். நடைப்பயிற்சியின்போது மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள குறைகளை குறிப்பு எடுத்துக்கொண்டு அதிகாரிகளை அழைத்து அதனை உடனடியாக சரிசெய்ய ஆட்சியர் அறிவுறுத்தியதாக அதிகாரி கள் தெரிவித்தனர்.
Next Story

