மகளிர் சுய உதவி குழு மாவட்ட கலெக்டர் ஆய்வு

மகளிர் சுய உதவி குழு மாவட்ட கலெக்டர் ஆய்வு
X
மகளிர் சுய உதவிக்குழுவின் உற்பத்திப் பொருட்கள் சந்தை45 அரங்குகள் அமைப்பு : மாவட்ட கலெக்டர் ஆய்வு
ஈரோட்டில் மகளிர் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுவின் உற்பத்திப்பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் கல்லூரி சந்தையை மாவட்ட கலெக்டர் கந்தசாமி பார்வையிட்டார். ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்களை, மாணவர்களின் மத்தியில் கொண்டு சென்று பிரபலமாக்கும் வகையிலும், வணிக மேலாண்மை பயிலும் மாணவர்களின் திறனை பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும், மகளிர் சுய உதவிக்குழுவின் உற்பத்திப்பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் கல்லூரி சந்தை கண்காட்சி, ரங்கம்பாளையத்திலுள்ள ஈரோடு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இச்சந்தை நாளை (11ம் தேதி) வரை நடைபெறுகிறது. சந்தையில் சுமார் 45 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியில் 45 மகளிர் சுய உதவிக்குழுவினர்கள், கைவினைப்பொருட்கள், மண்பாண்டங்கள், பவானி ஜமுக்காளம், சென்னிமலை பெட்ஷீட், கைத்தறி சேலைகள், காட்டன் சேலைகள், பட்டுப்புடவைகள், துண்டுகள், ஆயத்த ஆடைகள், கால்மிதியடிகள், டிசைன் மிதியடிகள், பேன்சிப் பொருட்கள், காட்டன் பைகள், சணல் பைகள், மரச்செக்கு எண்ணெய்கள், மரச்சாமான்கள், மூங்கில் பொருட்கள், செயற்கை ஆபரணங்கள், பாக்குமட்டை பொருட்கள், சிறுதானியங்கள், சிறுதானிய உணவுப்பொருட்கள், தேன், திண்பண்டங்கள், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பழங்கள், வேர்க்கடலை, மஞ்சள், குண்டு வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரை போன்ற பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர். நேற்று கல்லூரி சந்தை கண்காட்சியை சுமார் 1000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டு, பொருட்களை வாங்கி சென்றனர். இக்கண்காட்சியை மாவட்ட கலெக்டர் கந்தசாமி நேரில் பார்வையிட்டார். திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பிரியா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, மகாத்மா காந்தி தேவிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ஈரோடு மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்று வரும் கிளை வாய்க்கால் தூர்வாரும் பணிகளை, மாவட்ட கலெக்டர் கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Next Story