மின்கல வாகனங்கள்அமைச்சர் வழங்கினார்

மின்கல வாகனங்கள்அமைச்சர் வழங்கினார்
X
குப்பையை தரம் பிரிக்க 17 மின்கல வாகனங்கள்அமைச்சர் முத்துசாமி வழங்கினார்
ஈரோட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், ரூ.47.26 லட்சம் மதிப்பில், குப்பையை தரம் பிரித்து சேரிக்கும் 17 மின்கல வாகனங்களை வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார். ஈரோட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், ரூ.47.26 லட்சம் மதிப்பிலான மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து சேரிக்கும் 17 மின்கல வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துக்கொண்டார். இதில், எலவமலை ஊராட்சிக்கு 9 மின்கல வாகனங்கள், மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சிக்கு 5 மின்கல வாகனங்கள், பேரோடு ஊராட்சிக்கு 1 மின்கல வாகனம் மற்றும் பிச்சாண்டம்பாளையம் ஊராட்சிக்கு 2 மின்கல வாகனங்கள் என 17 மின்கல வாகனங்களை வழங்கி, அமைச்சர் சு.முத்துசாமி சேவையை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு, குறைகளை கேட்டறிந்தார்.இதில், மாவட்ட கலெக்டர் கந்தசாமி, திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பிரியா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா, ஈரோடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அம்புரோஸ், லதா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story