ராணிப்பேட்டையில் இலவச பஸ் பயண சலுகைஅட்டை கால அவகாசம் நீட்டிப்பு

X
மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசால் அரசு பஸ்களில் பயணம் செய்ய இலவச பஸ் பயண சலுகை அட்டை வழங்கப் பட்டு வருகிறது. அவ்வாறு, 2024-25-ம் நிதியாண்டிற்கு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளில் கல்வி பயில்பவர்கள், பணிக்கு செல்பவர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சையின் பொருட்டு செல்பவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச பஸ் பயண சலுகை அட்டை கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி வரை மட்டும் செல்லத்தக்கதாக இருந்தது. இந்தநிலையில் இலவச பயண சலுகை அட்டை காலத்தை 31.9.25 வரை நீட்டித்து, மாற்றுத்திறனாளிகள் பயண சலுகை அட்டையை பயன்படுத்தி அரசு பஸ்களில் பயணம் செய்யலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Next Story

