மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் சமையலறை கட்டிடம் திறப்பு

X
நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியம் மதவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 7.56 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமையலறை கட்டிடம் திறப்பு விழா இன்று (ஜூலை 10) நடைபெற்றது. இதில் மானூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் செல்வி ஸ்ரீலேகா அன்பழகன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் பாசகுமாரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story

