ஜெயங்கொண்டம் அருகே ஓட்டு வீடு மர்மமான முறையில் எரிந்து சாம்பலானது வீட்டில் இருந்த ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம்

X
அரியலூர், ஜுலை 8- அரியலூர் மாவட்டம் பெரியவளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் இவரது மனைவி ரேவதி நடராஜன் இறந்துவிட்ட நிலையில் ரேவதி தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார். மகனும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் தனியாக இருந்த வீட்டில் வசிக்க அச்சப்பட்டு பெரியவளையம் கிராமத்தில் வாடகை வீட்டில் ரேவதி மட்டும் தனியாக வசித்து வருகிறார் இந்நிலையில் இவர் நெடுஞ்சாலையில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று விட்டு திரும்பும் போது தனது வீடு தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இது குறித்து ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறை தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர் வீட்டில் இருந்த பித்தளை பாத்திரங்கள் பீரோ உள்ளிட்ட ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எறிந்து சேதமடைந்தன. இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு தீப்பிடித்து எறிந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story

