கஞ்சா விற்ற இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

X
அரியலூர், ஜூலை 10- அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கஞ்சா விற்ற இளைஞர் குண்டர் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம், விளாங்குடி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த குமார் மகன் ரவீன்குமார்(20). இவர், கடந்த 29.5.2025 அன்று, திருமானூர் கொள்ளிடம் ஆற்றங்கரையிலுள்ள நீரேற்று நிலைய பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த போது, அரியலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே பல கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது.இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக்சிவாச் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி உத்தரவிட்டதையடுத்து, நவீன்குமார் குண்டர் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். அதற்கான நகல்களை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம், அரியலூர் மாவட்ட காவல் துறையினர் வழங்கினர். .
Next Story

