அரியலூரில் எஸ்.ஆர்.எம்.யு-வினர் ஆர்ப்பாட்டம்

X
அரியலூர், ஜூலை.10- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் ரயில் நிலைய வளாகத்தில், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன்(எஸ்.ஆர்.எம்.யு) சார்பில் புதன்கிழமை நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் விரோத நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை வாபஸ் பெற வேண்டும். 2023 முதல் வழங்க வேண்டிய சிஆர்சி பதவி உயர்வுகளை காலதாமதமின்றி வழங்கிட வேண்டும். 8 ஆவது ஊதியக் குழுவை உடனே அமைத்திட வேண்டும். 3 லட்சத்துக்கும் மேலான காலியிடங்களை நிரப்பிட ஆண்டு தோறும் ஆர்ஆர்பி, ஆர்ஆர்சி தேர்வுகளை நடத்திட வேண்டும். அனைத்து தேர்வுகளும் ரயில்வே நிர்வாகமே நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் அரியலூர் கிளைச் செயலர் த.செல்வகுமார் தலைமை வகித்தார். செயலர் வேல்முருகன், பொருளாளர் எம்.கார்த்திக், உதவி செயலர்கள் ரகு, வீரமுத்து, வீ.கண்ணன், சிவககுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர். :
Next Story

