தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தப் போராட்டம்

தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தப் போராட்டம்
X
குமாரபாளையத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது.மத்திய அரசை கண்டித்து அனைத்து
தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலை நிறுத்தப் போராட்டம் குமாரபாளையத்தில் நடந்தது. 4 தொழிலாளர் விரோத சட்டங்களை கைவிட வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் மாத ஊதியமாக 26 ஆயிரம் அறிவிக்க வேண்டும், காண்ட்ராக்ட், தினக்கூலி, திட்ட பணியாளர் உள்ளிட்ட அனைவரையும் நிரந்தரமாக்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் 9 ஆயிரம் வழங்க வேண்டும், பழைய பென்சன் முறை கொண்டு வர வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் நஞ்சப்பன், கணேஷ்குமார், பாலசுப்ரமணி, அசோகன், விஜய்ஆனந்த், பிரபாகரன், சண்முகம், அர்த்தனாரி, மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் அணி சார்பில் சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர். ஏ.ஐ.டி.யூ.சி.,சிஐடியூ, ஹெச்.எம்.எஸ்., ஏ.ஐ.சி.சி.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி.,எம்.எல்.எப்., நம்மவர் தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. இதில் ஆண்கள் 75, பெண்கள் 36 பேர் கைது செய்யப்பட்டனர்.
Next Story