ஏழை மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டுகள்

X
Komarapalayam King 24x7 |10 July 2025 2:23 PM ISTகுமாரபாளையத்தில் ஏழை மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டுகள் வழங்கப்பட்டன.
குமாரபாளையம் அம்மன் நகர், நாராயண நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மற்றும் ஏழை மாணவ, மாணவியருக்கு, கல்வியை ஊக்குவிக்கும் விதமாக இலவசமாக நோட்டுக்கள், கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. இதில் செயலர் லோகநாதன் பேசியதாவது: யாசகம் பெற்றாவது கல்வி கற்க வேண்டும் என்ற பொன்மொழிக்கு ஏற்றபடி, கல்வியை தவறாமல் பயில வேண்டும். எண்ணற்ற சிறுவர், சிறுமியர் வாழ்க்கையில் குடும்ப சூழல் காரணமாக கல்வி கிடைக்காத ஒன்றாக உள்ளது. கல்வி கிடைத்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். கற்ற கல்வியை வைத்து தன்னால் ஆன உதவியை இல்லாதவர்களுக்கு செய்திட வேண்டும். நாம் வாழ பாடுபட்ட பெற்றோர்களை மறக்காமல் அவர்கள் இறுதி காலம் வரையில் காக்க வேண்டும். கல்வியை போதித்த ஆசிரியர்களை வணங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இதில் துணை தலைவர் கணேசன், பொருளர் சுப்ரமணியன் உள்பட பலர் வாழ்த்தினர். 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயன்பெற்றனர்.
Next Story
