செங்கல்பட்டு தெற்கு மாவட்ட விசிக கட்சி சார்பில் செய்யூரில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்

X
செங்கல்பட்டு தெற்கு மாவட்ட விசிக கட்சி சார்பில் செய்யூரில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட விசிக கட்சி சார்பில் மதசார்பின்மை காப்போம் பெருந்திரள் பேரணி தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அது குறித்து சிறப்பு ஆலோசனைக் கூட்டம் செய்யூர் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் காஞ்சி தமிழினி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக விசிக கட்சியின் துணை பொது செயலாளர் எழில்கரோலின், மேனாள் மண்டல செயலாளர் சூ.க விடுதலைசெழியன், மேனாள் மாவட்ட செயலாளர் சூ.க.ஆதவன் ஆகியோர் கலந்து கொண்டு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்திற்கு செங்கல்பட்டு தெற்கு மாவட்ட விசிக கட்சி சார்பில் திரளான நிர்வாகிகள் எவ்வாறு கலந்து கொள்ள வேண்டும் கட்சியின் ஆக்க பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் முகாம் நிர்வாகிகள் கார்வேந்தன், புரட்சி மாறன், புகழேந்தி, தமிழ் விரும்பி, அகிலன், எழில்இராவணன், முரளி, சிம்பு, ஜீவகன், வினோத், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

