தேன்கனிக்கோட்டை: நாய் கடித்து வாலிபர் உயிரிழப்பு

தேன்கனிக்கோட்டை: நாய் கடித்து வாலிபர் உயிரிழப்பு
X
தேன்கனிக்கோட்டை: நாய் கடித்து வாலிபர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள குப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டதின்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எட்வின் பிரியன் (23) இவர் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு இவரை நாய் கடித்ததாகக் கூறப்படுகிறது. இதை அவர் கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில், நேற்று முன் தினம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு உடலில் சில மாற்றங்கள் இருந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக ஓசூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அதிகமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு இன்று காலை அவர் உயிரிழந்தார்.
Next Story