எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு வழங்கிய கிராம மக்கள்

X
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள குராயூர் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அமைந்துள்ளது சிலைகள் சேதமடைந்ததால் கிராம மக்கள் ஒன்று கூடி மணிமண்டபம் கட்டினர். கோட்டாட்சியரிடம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலையை மட்டும் மராமத்து பணி செய்ய அனுமதித்ததாகவும் மருது பாண்டியர்கள் சிலை வைக்க அனுமதி வாங்கவில்லை என்று மணிமண்டபத்தை திறக்காமல் வருவாய்த்துறையினர் சீல் வைத்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரிடம் குராயூர் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர் அதன் அடிப்படையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் குராயூர் கிராமத்திற்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கிராம மக்கள் ஒரே சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் மக்களுக்கு இடையூறு இன்றி முன்னோர்களால் கட்டப்பட்டு தற்போது பொதுமக்களால் புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ள சிலைகளை திறக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் விரைவில் மணி மண்டபம் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார் .
Next Story

