பரமண்கேனி குப்பத்தில் மீன் வலை பின்னும் கூடம், மீன் ஏல கூடம் அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ

பரமண்கேனி குப்பத்தில்  மீன் வலை பின்னும் கூடம், மீன் ஏல கூடம்    அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ
X
பரமண்கேனி குப்பத்தில் மீன் வலை பின்னும் கூடம், மீன் ஏல கூடம் அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ
பரமண்ககேனி குப்பத்தில் மீன் வலை பின்னும் கூடம், மீன் ஏல கூடம் எம்எல்ஏ பனையூர் மு. பாபு அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பரமண்ககேனி குப்பத்தில் மீன் வலை பின்னும் கூடம், மீன் ஏல கூடம் பலத்தை சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அந்த ஆபத்தான கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலன் துறை சார்பில் சார்பில் ரூபாய் 1.40 கோடி மதிப்பீட்டில் கடலோர மீனவ கிராமத்தை கால நிலைக்கு ஏற்ப வளப்படுத்தும் பணி மற்றும் மீன் வலை பின்னும் கூடம், மீன் ஏல கூடம் இரண்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி கடற்கரை பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் செய்யூர் எம்எல்ஏ பனையூர் மு. பாபு கலந்து கொண்டு அடிக்கல் அடிக்கல் நாட்டி மீனவர்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும் அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.பாபு,கவுன்சிலர் செல்வக்குமார் விசிக ஒன்றிய செயலாளர் மேகநாதன், நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சித்தாமூர் ஒன்றியம் வெடால் கிராமத்தில் விசிக கட்சி சார்பில் அம்பேத்கர் படிப்பகம் கட்டும் பணி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அம்பேத்கர் பிரதாப் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த பணியினை செய்யூர் எம்எல்ஏ பனையூர் மு. பாபு பார்வையிட்டார். ஒன்றிய செயலாளர் சிற்றரசு, மாவட்ட செயலாளர் தமிழினி, முன்னாள் மாவட்ட செயலாளர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அம்பேத்கர் பிரதாப், ஒன்றிய செயலாளர் புகழேந்தி நிர்வாகிகள் தண்டபாணி, பெரியாண்டவன், வளவன், மூர்த்தி, ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story