மாதிரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

X
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி, காஞ்சிபுரம் செல்லும் சாலையில், மஹாசக்தி மாதிரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், இந்தாண்டிற்கான மகோத்சவ விழா நேற்று முன்தினம் மஹா கணபதி பூஜையுடன் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று, காலை 6:00 மணிக்கு, அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின், காலை 7:00 மணிக்கு, சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் துவங்கியது. அதில், பக்தர்கள் விரதமிருந்து பால்குடத்தை சுமந்தவாறு, பேருந்து நிலையம் வழியாக, மாதிரியம்மன் கோவிலை சென்றடைந்தனர். பிற்பகல் 12:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்வு நடந்தது.
Next Story

