காஞ்சிபுரம் மாவட்டத்தில் குட்கா விற்பனை இருவர் சிக்கினர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  குட்கா விற்பனை இருவர் சிக்கினர்
X
வெவ்வேறு இடங்களில், கஞ்சா மற்றும் குட்கா போதை பொருட்களை விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த களினுார் கிராமம், பஜனைக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருண், 25; நேற்றுமுன்தினம், வள்ளுவப்பாக்கம் கிராமத்தில், கஞ்சா விற்ற வரை வாலாஜாபாத் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதேபோல, காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால், 49; இவர், புதுப்பாளையம் பகுதியில் பெட்டிக்கடையில் குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்தார். அவரை கைது செய்த சிவகாஞ்சி போலீசார், குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Next Story