திமுக கவுன்சிலரின் கணவருக்கு அடி உதை! பொதுமக்கள் சாலை மறியல்!

திமுக கவுன்சிலரின் கணவருக்கு அடி உதை! பொதுமக்கள் சாலை மறியல்!
X
திமுக கவுன்சிலரின் கணவருக்கு அடி உதை! பொதுமக்கள் சாலை மறியல்!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் நியாய விலை கட்டிடம் மற்றும் பணியை நேரில் பார்வையிட சென்ற திமுக கவுன்சிலரின் கணவருக்கு அடி உதை! பொதுமக்கள் சாலை மறியல்! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 34 வார்டு காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று சி.கே.சி நகர் பகுதியில் வாடகையில் செயல்பட்டு வரும் நியாயவிலை கடையில் பொருட்கள் வாங்கி கொண்டு வாங்கி வரும் நிலைமை இருந்தது இதன் காரணமாக தங்கள் பகுதியில் நியாய விலை கடை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் 20 லட்சம் மதிப்பில் அந்த இடத்தில் நியாய விலை கடை மற்றும் புதிய கழிவறை மற்றும் அங்கன்வாடி கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி அப்பகுதி திமுக கவுன்சிலரான சுகுணா மற்றும் அவருடைய கணவர் ரமேஷ் ஆகிய இருவரும் அந்த இடத்திற்குச் பார்வையிட சென்றனர் அப்போது அதே பகுதியை சேர்ந்த மூன்று பேர் தற்போது கட்டப்பட்டு வரும் அரசு கட்டிடம் தங்களுக்கு சொந்தமான இடம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்பு கைகலப்பாக மாறியதில் கவுன்சிலரில் கணவர் ரமேஷ் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இதன் காரணமாக இன்று அந்த இடத்தில் திருப்பத்தூர் வட்டாட்சியர் நவநீதம் அந்த இடத்தை யாருக்கு சொந்தம் என அளவிட செய்ய சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் தனிநபருக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுகின்றனர் எனக்கூறி திருப்பத்தூர் வழியாக கிருஷ்ணகிரி செல்லும் பிரதான சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த வட்டாட்சியர் நவநீதம் மற்றும் திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சௌமியா மற்றும் திருப்பத்தூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாதானப்படுத்தியதன் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர் இதன் காரணமாக சிறிது தூரம் வாகனங்கள் அணிவகுத்துகின்றன மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story