நகராட்சி பொறியாளரை இதுவரையில் பார்த்ததில்லை அவர் பெயர்கூட தெரியாது அவரை நகராட்சியிற்கு வந்து வேலை செய்ய சொல்லுங்கள்,

நகராட்சி பொறியாளரை இதுவரையில் பார்த்ததில்லை அவர் பெயர்கூட தெரியாது அவரை நகராட்சியிற்கு வந்து வேலை செய்ய சொல்லுங்கள்,
X
நகராட்சி பொறியாளரை இதுவரையில் பார்த்ததில்லை அவர் பெயர்கூட தெரியாது அவரை நகராட்சியிற்கு வந்து வேலை செய்ய சொல்லுங்கள்,
நகராட்சி பொறியாளரை இதுவரையில் பார்த்ததில்லை அவர் பெயர்கூட தெரியாது அவரை நகராட்சியிற்கு வந்து வேலை செய்ய சொல்லுங்கள், ஆட்சியின் பெயரை கெடுப்பதற்காக அதிகாரிகள் வேலை செய்கிறீர்கள் வாணியம்பாடி நகர்மன்ற கூட்டத்தில் அதிகாரிகள் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய நகர்மன்ற உறுப்பினர்கள்.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் இன்று சாதாரண நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் உமாபாய் சிவாஜிகணேசன் தலைமையில் நடைப்பெற்றது, இதில் வாணியம்பாடி நகராட்சியை சேர்ந்த 36 வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர், அப்பொழுது கூட்டத்தில் பேசிய நகர்மன்ற உறுப்பினர்கள், தமிழக அரசு நகராட்சியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கியுள்ளது, ஆனால் நகராட்சி அதிகாரிகள் பணிகளை செய்யமால் மெத்தனம் காட்டுவதாகவும், நகராட்சியில் பணியாற்றும் செயற்பொறியாளரை இதுவரையில் பார்த்ததில்லையெனவும், அவர் பெயர் கூட தெரியவில்லையென நகர்மன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.. மேலும் நகராட்சியில் நிலுவையில் உள்ள பணிகளை அதிகாரிகள் உடனடியாக முடிக்க வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.. இக்கூட்டத்தில் நகர்மன்ற ஆணையர் ரகுராமன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.
Next Story