அரசு மாதிரி பள்ளி ஆசிரியை மீது குற்றச்சாட்டு. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளியில் விசாரணை.*

அரசு மாதிரி பள்ளி ஆசிரியை மீது குற்றச்சாட்டு. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளியில் விசாரணை.*
X
அரசு மாதிரி பள்ளி ஆசிரியை மீது குற்றச்சாட்டு. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளியில் விசாரணை.*
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மூன்றாம் வகுப்பு மாணவனை தீர விசாரிக்காமல் பிரம்பு எடுத்து கடுமையாக தாக்கிய அரசு மாதிரி பள்ளி ஆசிரியை மீது குற்றச்சாட்டு. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளியில் விசாரணை. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியில் வசிப்பவர் மணிவண்ணன் இவரது மனைவி அருணா இவர்களது மகன் மித்விக் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு கல்வி பயின்று வருகிறார். இந்நிலையில் இன்று வகுப்புக்குள் இருந்த மித்விக் தன்னுடைய சக நண்பனின் மீது தவறுதலாக கைபட்டு அவன் கண் கலங்கியதாக தெரிகிறது. இதனைக் கண்டு உணர்ச்சி வசப்பட்ட வக்கணம்பட்டி பகுதியில் இருந்து அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ராஜேஸ்வரி மாணவன் மித்விக்கை தீர விசாரிக்காமல் சட்டென அவனை கை, கால் மற்றும் முதுகு பகுதிகளில் பிரம்பால் கடுமையாக அடித்ததால் ஏற்பட்ட காயம் காரணமாக தகவல் அறிந்த அவரது தந்தை பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சம்பவம் குறித்து மாணவன் மற்றும் ஆசிரியையிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவம் குறித்து அதே பள்ளியில் வேலை செய்யும் சக ஆசிரியர் மாணவன் ஏதாவது செய்திருப்பான் அதனால் தான் அவர் அடித்திருப்பார் என்று சப்பை கட்டு கட்டி மாணவனை அடித்த ஆசிரியைக்கு வக்காலத்து வாங்கிய சம்பவம் நெருடலை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Next Story